Monday, March 9, 2009

உலக ஞானத்தால் வேதாகமத்தை அறியமுடியாது!

இறைமார்க்கம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாவது அதை முழுமையாக அறிவு பூர்வமாக நிரூபிக்க முயற்றால் தோல்விதான் மிஞ்சும் என்றே நான் கருதுகிறேன்!

அவரவர் தங்கள் தங்கள் வேதங்களை உயர்ந்தது என்று கருதுவது இயல்புதான். அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையை உண்மை என்றுதான் நிரூபிக்க முயல்வார்களே தவிர, அதில் உள்ள குறைகள் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.


பரிசுத்த வேதாகமத்துக்கு பிறகு இரக்கப்படட திருக்குர்ரானில் அனேக வசனங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் பைபிளில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே நோக்கம் இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பிலிருந்து மனிதனை தடம்புரள செய்வதுதான் என்று நான் கருதுகிறேன்.

இஸ்லாம் சகோதரர்கள் சொல்வதுபோல் வேதத்தில் இன்னும் அனேக விளங்க முடியாத முரண்பாடுகளும் புதிர்களும் அடங்கியுள்ளன என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து புரியவைக்கவே பரிசுத்த ஆவியானவர் என்றொரு ஆசான் அருளப்பட்டு இருக்கிறார். ஆவியானவரின் துணையில் வேதத்தை படித்தால் அர்த்தமே வேறாக தோன்றும். அப்படியிருக்க ஆவியானவரின் துணையின்றி, முரண்பாடு என்று சொல்வதை எல்லாம் விளங்க வைப்பது என்பது கடினம்.


உதாரணமாக

"பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." (யாத் 20:5)

என்று சொன்ன அதே கர்த்தர்

"குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை"(எசே:18:20)

என்றும் கூறியுள்ளார்.

இதை சாதாரணமாக பார்த்தால் நேரடி முரண்பாடுகள் போலதான் தெரியும். ஆனால் ஆவியின் துணையுடம் ஆண்டவரிடம் விசாரித்தால் மட்டுமே இதன் உண்மையை புரியமுடியும்.

இதன் விளக்கம் என்னவென்றால்
அக்கிரமம் செய்த தகப்பனுக்கு பிறந்த குமாரன், ஆண்டவரின் வழியை அறிந்துகொள்ளாமல் தகப்பன் பாதையிலேயே தவறாக நடந்தால், தகப்பனின் அக்கிரமும் சேர்ந்து குமாரனிடத்தில் விசாரிக்கப்படும். அதே நேரத்தில், அக்கிரமகார தகப்பனுக்கு பிறந்த மகன், தகப்பனின் அக்கிரமத்தை அருவருத்து ஆண்டவரின் சரியான பாதையில் நடந்தால் தகப்பனின் அக்கிரமம் அந்த குமாரனிடத்தில் விசாரிக்கப்படுவது இல்லை!

இதுபோல், வேதத்தில் உள்ள எல்லா முரண்பாடுகளுக்கும் ஆண்டவரிடத்தில் பதில் உண்டு. அதயெல்லாம் இவர்கள விளங்கவேண்டுமேன்றால் ஆவியின் வரத்தை பெறவேண்டும். இல்லையென்றால், ஆண்டவர் ஏன் வெளிச்சத்தை படைத்த்தபின் சூரியனை படைத்தார்? சூரியன் வந்தால்தானே வெளிச்சமே வருகிறது! பூமியை படைக்க ஏன் எழு நாள் எடுத்துக்கொண்டார்? என்று எல்லா வசனத்துக்கும் கேள்வியை அடுக்கி கொண்டே போகலாம்.

நாம் விளக்கமாக பதில் சொன்னாலும் அதன் நம்புவதைவிட அடுத்த குறை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து கேள்விகள் எழுப்புவார்கள் இதற்க்கு முடிவிருக்காது என்றே கருதுகிறேன்!

ஒருவர் வேதத்தின் உண்மைகளை அறிய விரும்பினால் தொடர்ந்து பல மணிநேரம் ஜெபித்து, பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்று அதன்பின் படியுங்கள் அவரே சத்யத்தை தெளிவுபடுத்த்ட வந்த சத்ய ஆவியானவர்.


ஆனால் திருக்குரானில் அப்படி எதுவும் ஆவியானவர் வாக்கு பண்ணப்படவில்லை. மற்றும் அதில் தவறு எதுவும் இல்லை என்று இஸ்லாம் சகோதரர்கள் மார்தட்டுவதால், கிறிஸ்தவர்கள் சொல்லும் முரண்பாட்டுக்கு நீங்கள் பதில் கொடுத்தே ஆகவேண்டும் அந்த வரிசையில் சகோதரர் உமர் அவர்களின் அனேக கேள்விகள் பதிலின்றி உள்ளன.

முக்கியமாக:


"அல்லா யாருக்கும் தெரிவிக்காமல் இயேசுவை தனதளவில் உயர்த்த காரணம் என்ன? கிறிஸ்த்தவம் என்ற மதம் உருவாக அல்லாவின் தவறுதான் காரணமா?

பைபிள் என்பது பலரால் எழுதப்பட்ட ஒத்த கருத்துள்ள வேதமாக இருக்க, அல்லா ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் முழு குர்ரானையும் இறக்கினார்" "அதை இறக்கிய முஹம்மது உண்மை தீர்க்கதரிசி என்று எப்படி யார் மூலம் அறிவது?" அவர் சில நேரங்களில் சாத்தானின் வசனத்தை சொல்லியதாகவும் பிறகு நீக்கியதாகவும் திருக்குரான் சொல்கிறதே!

"இஸ்லாம் வாளால் பரவியதா?" அதை அமைதி மார்க்கம் என்று சொல்வது தகுந்ததா?

"அல்லா படைக்கும் போதே ஒரு கூட்ட மக்களை நரகத்துக்கேன்று படைக்க காரணம் என்ன?"

"திருக்குரானுக்கு முன் வந்த வேதங்கள் இறைவனால் இறக்கப்பட்டு மனிதனால் கெடுக்கப்பட்டது என்று திருக்குரான் சொல்வதால், தான் இறக்கிய வேதங்களை தன்னாலே பாதுகாக்க முடியாத அளவுக்கு அல்லா பலவீனரா? அந்த பலவீனர் எப்படி திருக்குரானை மட்டும் மாறாமல் பாதுகாக முடியும்?


இதுபோன்ற பல கேள்விகள் பதில்லிலாமல் இருக்கின்றன இஸ்லாம் நண்பர்களே இந்த கேள்விகளுக்கு பதில்தர முயற்சியுங்கள். மற்றபடி பைபிள் வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போன்று இருபுறமும் பேசும். ஆவியானவர் என்ற ஆசான் இல்லாமல் பைபிளை புரிவது கடினம்!

என்னிடம் ஒரு இஸ்லாம் நண்பர், "உண்மை வேதம் எதுஎன்பதை எப்படி அறிவது? ஆவியான தேவனை அறிவது எப்படி?" என்று கேட்டார். இரண்டு மணிநேரம் தொடந்து முழு மனதோடு எது உண்மை வேதம் என்று தெரியவேண்டும் என்று விடாப்பிடியாக ஜெபம் பண்ணுங்கள் உண்மையை அறியலாம் என்று ஆலோசனை கூறினேன். அனால் பாவம் அவரால் பத்து நிமிடத்துக்கு மேல் ஒருமனமாய் இறைவனை தேட முடியவில்லை. தூக்கம் வருகிறது என்று சொல்லி முடியவில்லை என்று விலகிவிட்டார்.

உண்மையை அறிய தேவன் நியமித்திருக்கும் குறைந்தபட்ச தகுதி ஓன்று வேண்டும் வெறும் மனித ஞானத்தால் வேதாகமத்தை சரியாக பொருள்கொள்வது கடினம்!

சரி! ஏன் இறைவன் இப்படி ஒரு முரண்பாடுகள் நிறைந்த வேதத்தை கொடுத்துள்ளார். புரிந்துகொள்வதே கடினம் என்றால் எப்படி வேதாகம உண்மையை அறிந்துகொள்வது? என்ற கேள்வி எல்லோருக்கும் எல்லாம்.

"நித்ய ஜீவனை தருவேன்" என்பதே இறைவன் மனிதர்களுக்கு தந்த வாக்குத்தத்தம். இங்கு உலகத்தில் தங்கள் அபார அறிவால் அநேகரை குழப்பும் புத்திசாலிகள், நித்ய ராஜ்யத்துக்கும் வந்து குழப்பாதபடி தேவன் வேதத்தை ஒருவருக்கு சரியாக புரியவைக்கும் பொறுப்பை தன்னிடமே வைத்துள்ளார். தேவன் உலக ஞானத்தை பயித்தியமாக்கியுள்ளார். உலக ஞானத்தால் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் இறைவனை அறிய முடியாது. அவரை அறிவதற்கு குறைந்தபட்ச தகுதி ஓன்று உண்டு! அது இருந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரை பெறமுடியும். அந்த ஆவியானவர் மூலமே தேவனை அறிவதும் நித்ய ஜீவனை அடைவதும் சாத்யமாகும்!

Saturday, December 29, 2007

திருக்குரான் Vs ஹோலி பைபிள்

உண்மை இறைவன் யார்? என்று அறியவேண்டும் என்ற வாஞ்சையில் 1992ம் வருடம் பலமணிநேரம் இறைவனிடம் அழுது மன்றாடி கேட்ட பொழுது என்னை இறைவன் தமது ஆவியின் வல்லமையால் 7 நாட்கள் நிரப்பி இந்த உலகத்தைப்பற்றி அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்
.
நரகம் பாதாளம் இரண்டையும் நேரில் பார்ப்பதுபோல பார்த்து கதறினேன்:
அப்பொழுது நான் நரகம் பாதாளம் போன்றவற்றை நேரில் பார்ப்பதுபோல பார்த்து அங்கு இருக்கும் மனித ஆத்துமாக்கள் அனுபவிக்கும் வேதனையை எனது சரீரத்தில் நான் அனுபவித்தேன். நரகத்தை பார்த்து அலறி துடித்த எனக்கு பயித்தியம் பிடித்து விட்டது என்று நினைத்த என் உறவினர்கள் என் கால்களை சங்கிலியால் கட்டி ஒரு கோவிலில் கட்டி போட்டுவிட்டனர்
.
அந்த சம்பவத்தால் மிகவும் பதிக்கப்பட்ட நான் அந்த கொடூர வேதனையான இடத்துக்கு யாரும் போகவே கூடாது என்று பலநாட்கள் இறைவனிடம் கண்ணீருடன் கெஞ்சியபோது, மொத்த மனித வர்க்கமும் நரகம் போவதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு கடினமான வழியை தெரியப்படுத்தினார். அந்த நேரத்தில் நடந்த அதிசயமான உண்மை சம்பவங்கள் பற்றிய முழு விபரங்களையும் http://www.karththar.blogspot.com/ என்ற தளத்தில் விளக்கமாக எழுதி வருகிறேன் விருப்பம் இருந்தால் படிக்கவும்
.
நான் யாரையும் குற்றம் கண்டுபிடக்க வரவில்லை, உண்மை எது பொய் எது என்று சொல்லவும் வரவில்லை. உண்மையில் நான் ஒரு இத்து குடும்பத்த்தை சார்ந்தவன். மற்ற கிறிஸ்தவர்கள் போல அல்லாமல் பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு என்னும் புத்தகமே இறைவனின் உண்மை வார்த்தைகள் என்றும், இயேசு கிறிஸ்த்து பிறந்ததே இறைவன் அதில் சொல்லியிருக்கிற வார்த்தைகள் நிறைவேருவதர்க்காகத்தான் என்றும் நம்புபவன். மற்றும் பழைய ஏற்பாடு சொல்லும் விதிப்படி ஒருவன் கண்டிப்பாக வாழ வேண்டும் என்று உறுதியாக இறைவனால் போதிக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக அதன்படி வாழ்ந்து வருபவன்.
.
என்னுடைய வேண்டுதல் எல்லாம் நமது அற்ப அறிவைக்கொண்டு இறை வார்த்தைகளை ஆராயாமல் நீங்களே இறைவனிடம் கேட்டு அறியவேண்டும் என்பது தான். இறைவன் ஜீவனுள்ளவர் அவர் எப்பொழுது யார் முழு வாஞ்சையோடு கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளார். அவ்வாறு கேட்டதில் இறைவன் எனக்கு தெரிவித்த உண்மை செய்திகளைதான் எழுதுகிறேன். நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உண்மையான சரியான பதில் தெரிந்திருந்தால் நீங்கள் COMMAND மூலம் தெரிவிக்கலாம். அதற்கான பதிலை இறைவனிடம் அமர்ந்து விசாரித்து அறிந்து சரியான ஆதாரங்களுடன் எழுதுகிறேன். இல்லை என்றால் உங்கள் பதிலை ஒத்துக்கொள்கிறேன். உண்மை எதுவென்று அறிய வேண்டும் என்பது தான் எல்லோருடைய நோக்கமும்
(மேலும் எழுத்துப்பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்)
.
இறைவன் யார்? கர்த்தரா அல்லது அல்லாஹா? அல்லது இருவரும் ஒருவரா?
என்னை ஆட்கொண்டு என்னுள் 7 நாட்கள் இருந்து பேசிய அந்த இறைவனின் பெயர் எது என்று நான் கேட்க துணிவில்லை அகவே அந்த நேரம் எனது கையில் இருந்த பைபிளில் உள்ள இறைவனின் பெயராகிய கர்த்தர் தான் அவர் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்தில் இஸ்லாம் மேல் அதிக ஈடுபாடு உள்ள ஒரு சகோதரனை சந்திக்க நேர்ந்தது அவரிடம் அந்த செய்தியை சொன்னபோது அவர் நீங்கள் பைபிளில் இருக்கிறது என்று சொல்லும் அனேக காரியங்கள் திரு குரானிலும் இருக்கிறது. அது மிக நீதி நேர்மையான வாழ்க்கையை போதிக்கிறது அதிலும் இயேசுவை பற்றி சொல்லியிருக்கிறது என்று சொன்னார்.
.
அந்த செய்தி எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது உடனே அவரிடம் இருந்த தமிழ் குரானை வாங்கி படித்தேன் அதில் உள்ள வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன ஆனாலும் இரண்டுக்கும் இடையே சில முக்கியமா வேற்றுமைகள் இருந்தன அதாவது:

 • இயேசுவின் சிலுவை மரணம்
 • சாத்தான் தோன்றிய வரலாறு
 • இறை வார்த்தைகள் கொடுக்கப்பட்ட விதம்
 • பலியிடுதல் போன்றவை.

இதனால் எனக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது எது உண்மையான வேதம்? குரானா? பைபிளா? ஒரு இறைவன் இரண்டு விதமாக சொல்ல மாட்டார் அல்லவா?அப்படி என்றால் எது உண்மை? ஒருவேளை என்னை சந்தித்த இறைவன் அல்லாவாக இருக்குமோ? என்றெல்லாம் எண்ணம் வந்து விட்டது.

உடனடியாக எனது வழக்கப்படி ஒருநாள் இரவு நெடுநேரம் வரை இறைவனிடம் சென்று அமர்ந்து எது உம்முடைய உண்மையான வார்த்தைகள் என எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டு மிகவும் பிடிவாதமாக நீர் சொல்லும் வரை நான் தூங்க போவதில்லை என அமர்ந்து இறைவனிடம் மன்றாடினேன் சுமார் 12மணிக்கு மேல் இறைவன் என்னுள் கீழ்க்கண்டவாறு பேசினார்
.
(நான் எங்கள் வீட்டில் பவர் சோப் உபயோகிப்பது வழக்கம்)

நீ உபயோகிக்கும் பவர் சோப்பில் ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் உன்னால் பார்த்தவுடன் வித்யாசம் கண்டு பிடிக்க முடியுமா என்றார்.
.
முடியாது என்றேன்
.
ஆம் ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் இடையே வித்யாசம் கண்டுபிடிப்பது மிக மிக கடினம். இரண்டும் ஒன்று போலத்தான் இருக்கும் சொல்லப்போனால் டூப்ளிகேட் ஒரிஜினலை விட மிக மிக நம்பக்கூடியதாக இருக்கும் எனேன்றால் அது முதலில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினலை பார்த்து அதே மாடலில் அது போலவே தயாரிக்கப்படும்.

.

மேலும் இரண்டு சோப்பையும் வைத்தும் துணி துவைக்கலாம் ஆனால் நாம் எதற்காக துணி துவைக்கிறோம் அழுக்கு போகத்தானே? அந்த மெயின் பர்பஸ்தான் சால்வ் ஆவதில்லை என்றார். அதுபோலத்தான் இந்த இரண்டும் இதில் ஒன்று ஒரிஜினல் மற்றொன்று டூப்ளிகேட். ஒன்று மனிதனுக்கு சரியான வழி காட்டும் இன்னொன்று சரியான வழி போல தெரிந்தாலும் முடிவில்தான் அது தவறான வழி என உணர முடியும் என சொல்லிவிட்டார்.


இறைவனிடம் அமர்ந்து விசாரியுங்கள்:

அன்பு இஸ்லாமிய நண்பர்களே நான் சொல்வதை வைத்து நீங்கள் எதையும் நம்ப வேண்டாம் ஏனென்றால் நானும் ஒரு மனிதனே! ஆனால் நான் உங்களுக்கு சொல்லும் மிக முக்கியமான செய்தி என்னவென்றல் இறைவன் ஜீவனுள்ளவர், எந்த நேரத்தில் யார் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளார். அவர் பெரியவர், எல்லாம் செய்ய வல்லவர் என்று திருக்குர்ரானும் கூறுகிறது. அவர் மனிதனிடம் நேரடியாக நான் பேசமாட்டேன் என்றோ, தூதர் முலமாகத்தான் பேசுவேன் என்றோ திரு குர்ரானில் எங்கும் சொன்னது போல் எனக்கு தெரியவில்லை. இப்படி இருக்கும் போது,நீங்கள் ஏன் அமர்த்து இறைவனிடம் விசாரிக்ககூடாது? அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்துகொள்ள கூடாது?

சரி, திருகுரான் கொடுக்கப்பட்டு இத்தனை காலமாக யாராவது அப்படி இறைவனிடம் மணிகணக்கில் அமர்ந்து விசாரித்து அதன் உண்மை தன்மையை கண்டு கொண்டது உண்டா? (உண்மையில் மன சாட்சியை தொட்டு) அப்படி யாரவது தெரிந்துகொண்டு எழுதியவர்கள் இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள்.
.
ஒரு ஜின் சாத்தான் இன்னொரு ஜின் கொடுத்தது வேதமா?
மேலும் நான் உங்களை இதுபோல் விசாரிக்க சொல்லும் காரணம் என்னவென்றால் நாளை மரித்து இறைவன் முன்னால் போய் நிக்கும்போது, இறைவன் உங்களை பார்த்து "யார் சொன்னதை கேட்டு இந்த திருக்குரானை எனது வார்த்தை என்று நம்பினாய்? நீ ஏன் என்னிடம் அமர்ந்து விசாரிக்கவில்லை? ஒரு தூதனின் கீழ்படியாமையினால்தானே சாத்தான் என்ற ஒன்றே உருவானது இன்னொரு தூதன் சொன்ன வார்த்தைகளை எனது வார்த்தைகள் என எப்படி நீ எடுத்துக்கொள்ளலாம்? நீ செய்தது தவறு என சொல்லிவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்.
.
அன்பானவர்களே நான் இறைவனிடம் பலமணி நேரம் அமர்ந்து விசாரித்துவிட்டேன் ஆகையால் இதை எழுதுகிறேன். உங்கள் பக்தி வைராக்கியம் நல்லதுதான் இறைவனின் வார்த்தைகள் மேல் வைராக்கியம் இல்லை என்றால் அதன்படி வாழ முடியாது. ஆனாலும் நமது வைராக்கியம் சரியான வார்த்தைகள் மேல் இல்லை என்றல் அதனால் பயனேது? பலர் விக்ரகங்களின் மீதும் இதே போல் பக்திவைராக்கியத்துடன் இருப்பது போலல்லவா ஆகிவிடும்
.
நான் சொல்லும் வார்த்தைகளுக்கு ஆதாரம் உள்ளது. அடிப்படை தன்மையிலேயே வேறுபாடுகள் உள்ளது. உங்களின் புரிந்துகொள்ளுதலுக்காக அதை எழுதுகிறேன். நடுநிலையோடு சிந்தித்து பார்க்கவும். நான் கேட்கும் எல்லா கேள்விக்கும் சரியான பதில் தெரிந்தால் தெரிவிக்கவும் அல்லது அதற்கான பதில் எங்கே இருக்கிறது என்று தெரியப்படுத்தவும். உங்களுக்கு சதேகம் எழுமானால் மணிக்கணக்கில் இறைவனிடம் அமார்ந்து விசாரியுங்கள் ஜீவனுள்ள அவர் தமது உண்மை வார்த்தை எதுவென்று உங்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்துவார்


பைபிள் - குர்ரான் முக்கிய வேற்றுமைகள்:

இரண்டு வேதங்களுக்கும் அனேக வேற்றுமைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் நாம் பார்க்கலாம்.
 1. திருக்குர்ரான் இறை தூதர் ஜிப்ரியீல் அவர்களால் முகமது நபி அவர்கள் ஒருவருக்கு மாத்திரம் இறக்கப்பட்ட ஒரே புத்தகம்.பைபிள் என்பது சில புத்தகங்களை தவிர அனேக புத்தகங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த அந்தந்த நிகழ்ச்சிகளை பார்த்து உணர்ந்து அனுபவித்த மக்களால் அவர்களாலே எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு ஆகும்.
 2. பைபிள் மற்றப்பட்டுவிட்டது என்றும் அது கெடுக்கப்பட்ட வேதம் என்பது இஸ்லாமியரின் கருத்து.ஆனால் திருகுர்ரான் இறக்கப்பட்ட நாள் முதல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இஸ்லாமியர் கருத்துகின்றனர்.
 3. பைபிள், இறைவன் ஒருவரே அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்றாக பிரிந்து செயல்படுகிறார் என கூறுகிறது. திருகுர்ரான், இறைவன் ஒருவரே அவர் பிரிந்திருக்கவில்லை அவருக்கு குமாரன் என்று யாரும் கிடையாது என்று கூறுகிறது.
 4. பைபிள், இயேசு மறித்து மூன்றாம் நாள் உயிர்த்து பரலோகம் போனார் என சொல்கிறது. திருக்குர்ரான், ஈசா நபி மரிக்கவில்லை அவர் இறைவனால் தனதளவில் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்றும் அவருக்கு பதில் வேறொருவர் சிலுவையில் மாற்றப்பட்டார் என்றும் கூறுகிறது.
 5. தேவதூதன் ஒருவன் தேவனைபோல ஆகவேண்டும் என்று நினைத்ததால் இறைவனால் தள்ளப்பட்டு பூமிக்கு வந்து தீய சக்த்தியாக மாறினான் என்று பைபிள் சொல்கிறது.திருக்குர்ரான் இப்லிஸ் என்னும் இறைத்தூதன் இறைவனுக்கு கீழ்படியாமையால் சாத்தானாக மாறியதாகவும் பின்பு இறைவனிடம் அனுமதி கேட்டு மனிதர்களை கெடுப்பதாகவும் திருக்குர்ரான் சொல்கிறது.
 6. திருக்குர்ரான் இறைவன் படைக்கும் போதே ஒரு கூட்ட மக்களையும் ஜின்களையும் நரகத்துக்கேன்று படைத்துவிட்டார் என்று 7:179ல் சொல்கிறது. ஆனால் பைபிள், மனிதன் கெட்டு ஆக்கினை தீர்ப்பு அடையக்கூடாது என்பதற்காகவே இயேசுவை இறைவன் அனுப்பினார் என்று கூறுகிறது
 7. இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவத்தை மன்னிக்க முடியும் என்று பைபிள் கூறுகிறது. திருக்குர்ரான், இறைவனிடம் முழு மனதோடு வேண்டினால் போதும் பாவம் மன்னிக்கப்படும் அவர் ஒருவரே பாவத்தை மாணிக்க வல்லவர் என்று கூறுகிறது.
 8. பைபிள், இந்த உலகத்திலே கூட மேன்மையானதை அடையமுடியும் என்றும் மரணம் இல்லாமல் கூட வாழ வழி உள்ளது என்றும் கூறுகிறது திருக்குர்ரானில், இந்த உலகத்துக்கான ஆசிர்வத்ங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது மேலும் மரணம் இல்லாமல் வாழ வழி எதுவும் அதில் இல்லை
 9. பைபிள் உலக தோற்றம் முதல் அதன் முடிவுவரை தெளிவாக எழுதப்பட்ட ஒரே புத்தகம் மேலும் ஒவொரு வசனமும் எந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது போன்ற எல்லா விளக்கங்களும் தன்னுள் கொண்டது. திருக்குர்ரனில் எதுவும் முழுமையாக குறிப்பிடப்படவில்லை ஒரு வசனத்துக்கு விளக்கம் வேண்டுமென்றால் ஹதீஸ்கள் எனப்படும் வேறு புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் பைபிளில் உள்ள குறிப்புக்களை பார்த்துத்தான் விளக்கம் பெற முடியும்.
 10. திருக்குர்ரான் முகமது நபியே கடைசி தூதர் என்றும் அவருக்கு பின் எந்த தூதரும் வரமாட்டார் என்றும் கூறுகிறது. பைபிள் இயேசுவின் மரணத்துக்குப்பின் பரிசுத்த ஆவி என்னும் தேவ ஆவியானவர் மனிதனுக்குள் வந்து தங்கி இருந்து பாவத்தை கண்டித்து உணர்த்தி அதை ஜெயித்து வாழ பெலன் தருவார் என்று கூறுகிறது.

இவற்றுக்கான முழு விளக்கத்தையும் பார்க்கலாம்...

.
1. பைபிள் குர்ரான் அருளப்பட்ட விதம்:-
பைபிள் என்பது பல்வேறு மனிதர்களுக்குள் இறை ஆவி வந்து அவர்கள் மூலம் இறைவன் மனிதனை நோக்கி பேசுவது போல் உள்ளது (சில இடங்களில் மட்டும் கர்த்தர் தன் தூதனை அனுப்பி பேசியதாக உள்ளது.)
உதாரணமாக:
 • "கர்த்தர் சொல்வது என்னவென்றல்"
 • "கர்த்தருடைய வாய் இதை சொல்லிற்று"
 • "கர்த்தர் என்னை நோக்கி"
 • "கர்த்தராகிய ஆண்டவர் உரைப்பது என்னவென்றால்"
 • "கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி"
 • "கர்த்தர் கட்டளை இட்டார்"
போன்ற வார்த்தைகள் இறைவன் மனிதனை நோக்கி நேரடியாக பேசும் விதத்தில் உள்ளது.
ஆனால்
குர்ரான் என்பது இறை தூதனால் முகமது நபிக்கு சொல்லப்படு அவர் மூலம் மனிதனுக்கு சொல்ல கட்டளையிடுவது போல உள்ளது(2.97)
உதாரணம்:
 • (நபியே) அவர்களுக்கு சொல்லும்
 • (நபியே) நீர் கேட்பீராக
 • (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக
 • (நபியே) இவை அல்லாஹின் வசனங்களாகும்
 • (நபியே) நீர் கவனித்தீரா
இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது இறை தூதன் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகளா எது மேன்மையானது?
.
ஏன் இறைவன் நேரடியாக மனிதனிடம் பேச மாட்டாரா? முந்தய நபிகளாகிய மூஸா நபி போன்றோருடன் இறைவன் நேரடியாக பேசி இருக்கும் போது, உலக திருமறை என்று சொல்லப்படும் எல்லோரும் கட்டாயம் கைகொள்ள வேண்டிய முக்கியமான வார்த்தைகளை ஏன் தூதன் மூலம் சொல்லி அனுப்பினார்? ஏற்கெனவே இப்லீஸ் என்னும் ஒரு தூதன் இறைவனுக்கு கீழ்படியாமல் சாத்தானாக மாறி இருக்கும் போது இந்த தூதன் சொல்வதை மட்டும் எப்படி இறை வார்த்தைகள் என எடுத்துக்கொள்ள முடியும்.
.
ஏன் இறைவன் நேரடியாக நபியுடன் பேசி திருக்குர்ரானை வழங்கவில்லை?

(தெரிந்தால் சரியான விடை அளிக்கவும்)
.
பைபிள் மாற்றப்பட்டுவிட்டதா?
.
இன்று அனேக இஸ்லாம் நண்பர்கள் கேட்கும் கேள்வி பைபிள் மூல பிரதியை கட்ட முடியுமா? அதில் அனேக வார்த்தைகள் மாற்றப்பட்டுவிட்டது, பல புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுவிட்டது அது கெடுக்கப்பட்ட வேதம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதற்கு சாதகமாக பல உதாரணங்கள் கூறப்படுகின்றன.
.
உதாரணமாக ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள 5 புத்தகங்களும் மோசே என்னும் மூஸா நபியால் எழுதப்பட்டது என கிறிஸ்த்தவர்கள் கூறும் பட்ச்சத்தில் "மோசே மரித்தபின் கர்த்தர் அவனை அடக்கம் பண்ணினார்" போன்ற வார்த்தைகள் யாரால் சேர்க்கப்பட்டது போன்ற பல அறிவுபூர்வமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
.
அன்பானவர்களே பைபிள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு காரணம் இறைவன் இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவனுள்ளவர். அவர் என்றும் ஜீவனோடு இருந்து காரியங்களை நடப்பிக்கிறார். ஒருமுறை சொல்லிவிட்டு இனி இதில் மாற்றமில்லை நான் கொஞ்சம் இளைப்பாற போகிறேன் என்று போவதற்கு அவர் மனிதனல்ல. அவர் காலங்கள் தோறும் பல்வேறு தேவ மனிதர்களை அனுப்பி மனிதனை நெரிப்படுத்துகிறார்.
.
இயேசு கிறிஸ்த்துவோ முகமது நபியோ வாழ்த்த காலங்களில் இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்ப்பது, புகை விடும் வாகனம் ஒட்டி சுற்று சூழலை கெடுப்பது, அணு குண்டு போட்டு அழிப்பது, பீடி, சிகரெட், பான்பராக் போன்ற எதுவும் கிடையாது. ஆனால் இன்று எத்தனையோ புது புது பாவங்கள் பெருகிவிட்டன. அவற்றைபற்றி பைபிளிலோ குரானிலோ எந்த தகவலும் கிடையாது. நாம் பழையது மாறாது அது மட்டும்தான் உண்மை என்று போனால் புது புது பாவங்களை எப்படி அறிய முடியும்? சட்டத்துக்கு முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டுமே!
.
கிறிஸ்த்தவத்தில் பரிசுத்தஆவி என்னும் தேவஆவி :
ஆனால் கிறிஸ்த்தவத்தில் அப்படியல்ல, இயேசு கிறிஸ்த்து மரிக்கும்போது நான் போய் தூய ஆவி ஒன்றை அனுப்புவேன், அந்த ஆவியானவர் என்றென்றும் உங்களுள் தங்கி இருந்து (புது) பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துவார் என வாக்கு கொடுத்து சென்றார். அதேபோல பரிசுத்த ஆவியானது தன்னை தாழ்த்தி முழுஇருதயத்தோடு இறைவனை தேடும் அனைவருக்கும் இறைவனால் அருளப்ப்படுகிறது அது அவர்களை எந்த ஒரு புதுப்புது பாவத்தை குறித்தும் எச்சரித்து பாதுகாக்கிறது. அதை அடைந்தவர்களுக்குத்தான் அதன் மேன்மை தெரியும் மற்றவர்களுக்கு அதன் மேன்மை எப்படி தெரியும். மாம்பழத்தை சாப்பிடாமல் அதன் உண்மை சுவையை யாராலும் அறிய முடியாதல்லவா?
.
ஆனால் திருக்குர்ரான் முகமது நபியே கடைசி நபி என்றும் அவருக்கு பிறகு எந்த நபியும் வர மாட்டார் என்றும் சொல்ல காரணம் என்ன?
.
எத்தனையோ காலகாலம் தொட்டு எத்தனையோ இறை தூதர்களையும், தேவ மனிதர்களையும் அனுப்பி வந்த இறைவன் ஏன் அவரோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்? கடந்த 15OO வருடமாக உலகில் புது புது பாவங்கள் பெருகவிலையா? அவர் ஏன் தூதர்களை அனுப்பி எச்சரிக்கவில்லை? இறைவன் இளைப்பாற சென்றுவிட்டாரா? என்ற கேள்வி எழுகிறதே!
.
மேலும் உலகில் உயிரற்ற பொருட்கள்தான் மாறாமல் அப்படியே இருப்பதை பார்க்கிறோம் ஜீவனுள்ள எந்த ஒன்றும் மாறும் வளரும். எனவேதான் பைபிள் என்னும் வேதம் மாறியுள்ளது வளர்ந்துள்ளது. இறைவன் ஜீவனுள்ளவர் அவர் மாற்றுகிறார் அவர் அனுமதியின்றி யாரும் அதில் கை வைக்கமுடியாது. நமது தாத்தாவுக்கு தாத்தா பெயர் நமக்கு தெரியாத பட்ச்சத்தில் கடந்த 6000 வருட வரலாறையும் ஆதமின் பிறப்பில் இருந்து இயேசு கிரிஸ்த்துவின் பிறப்புவரை உள்ள அத்தனை பெயரையும் இறைவனன்றி யாரால் சொல்ல முடியும் சற்றே சிந்துயுங்கள்!
.
மேலும் பைபிளில் வெளிப்படுத்தின விசேஷம் என்னும் புத்தகத்தில் கடைசி அதிகாரங்களில் "இந்த புத்தகத்திலுள்ள வார்த்தயோடே எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது" என்று குறிப்பிட்டதும் உண்மையே. அதற்கு காரணம் என்னவெனில் பாவத்தை கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானது மனிதனுள் வந்து கிரியை செய்யும் வரை மாற அனுமதிக்கப்பட்ட வேதம் அதன் பிறகு மாற அனுமதிக்கப்படவில்லை. மாற்றங்கள் செய்பவர் மனிதனுக்குள்ளேயே வந்தபிறகு எழுத்தில் எதற்கு மற்றம்? எனவே அத்தோடு மாற்றங்கள் முடிந்துவிட்டது.
.
எனவே பைபிள் மாற்றப்பட்டதும் உண்மைதான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு பிறகு மாறாமல் இருப்பதும் உண்மைதான்.
.
முக்கியமாக
.
இறைவன் தன்னால் வழங்கப்பட்ட ஒரு வேதத்தை பாதுகாக்க முடியாமல் மாற்றப்பட அல்லது கெடுக்கப்பட அனுமதித்தால் அதே இறைவன் மற்ற வேதத்தை மட்டும் கெடாமல் பாதுகாப்பார் என்பது என்ன நிச்சயம்? அல்லது நாளை இன்னொரு வேதத்தை கொடுத்துவிட்டு இது மாறிவிட்டது என்று சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
.
(சரியான பதில் இருந்தால் தெரிவிக்கவும்)

3. இறைவன் ஒருவரா அல்லது மூவரா?
"இறைவன் ஒருவரே" இது சந்தேகம் அற்ற உண்மை ஆனால் அவர் மூன்றாக பிரிந்து செயல் படக்கூடாது என்று யார் அவருக்கு கட்டளையிட முடியும்.
.
இறைவன் மிகப்பெரியவர் என்றுதான் நம்மால் சொல்ல முடியுமே தவிர அவர் எவ்வளவு பெரியவர், எப்படி பெரியவர், ஆவரால் என்னவெல்லாம் செய்ய முடியும், என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதெல்லாம் அவர் ஒருவருக்கே அன்றி யாருக்கும் தெரியாது. நாம் அவர் என அப்படி செய்யவில்லை ஏன் அவர் மனிதன் போல நடந்துகொண்டார் என்றெல்லாம் கேட்க முடியாது.
.
அவரால் எல்லாமே செய்ய முடியும் என்றால் தீமையை உலகில் இருந்து அகற்றி எல்லோரையுமே அப்படியே மீட்டுவிடுவாரே! நம் அனுமதி இல்லாமல் நம்மை படைத்துவிட்டு பிறகு நம்மை பார்த்து அப்படி நட இப்படி நட அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஏன் சொல்ல வேண்டும்?
.
ஆகவே இறைவனின் தன்மைகள் என்னவென்பது யாருக்கும் முழுமையாக தெரியாது. குர்ரானை வேதத்தை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள் பைபிள் வேதத்தை வைத்து கிறிஸ்த்தவர்கள் சொல்கிறார்கள் அவ்வளவுதான் இரண்டில் எது உண்மையானது என்பதைத்தான் கண்டறிய வேண்டுமே தவிர இறைவனால் முடியுமா முடியாதா என்பது வாதமல்ல.
.
ஒரு சாதாரண ஐஸ் கட்டியை எடுத்துக்கொள்ளுங்கள் அது ஒரே நேரத்தில் மூன்று நிலைகளில் காணப்படும் அதாவது திட, திரவ, வாயு நிலைகளில் ஒரே நேரத்தில் அதால் இருக்க முடியும். இவற்றை எல்லாம் படைத்த இறைவனுக்கு மூன்றாக மட்டுமல்ல 30 அக கூட இருக்க முடியும்.
.
ஒரு மிகப்பெரிய நெருப்பில் இருந்து கொஞ்சம் தனியாக கொண்டுவந்தால் அதுவும் நெருப்புதான் அதை வைத்து எதையும் கொளுத்திவிட முடியும். அதுபோல இறைவன் என்னும் மிகப்பெரிய வல்லமையில் இருந்து வந்தவைகள் தான் குமாரனும் பரிசுத்த ஆவியும். பெயரில் தான் மாற்றமே தவிர தன்மை ஒன்றுதான்.
.
நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வேலையை செய்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட நமக்கே இத்தனை சக்தி இருக்குமென்றால் நம்மை படைத்த இறைவனுக்கு எப்படி வேண்டுமானாலும் செயல்பட முடியுமே! மனிதனை பாவத்தில் இருந்து மீட்க இயேசு என்னும் குமாரனை அவரால் உருவாக்க முடியாத என்ன?
.
நான் சொல்வதெல்லாம் இறைவனுக்கு யாரும் நீர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இட முடியாது. அவர் நினைத்தால் ஒருவராக இருப்பார் அல்லது மூவராகவும் செயல் படுவார் அவ்வளவுதான்.
.
4. இயேசு மரித்து உயிர்த்தாரா? அல்லது மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்டாரா?
அன்பானவர்களே! இயேசு வாழ்ந்த காலத்த்தயோ அல்லது முகமது நபி அவர்கள் வாழ்ந்த காலத்தையோ நாம் யாரும் நேரடியாக பார்த்தது கிடையாது. பிறகு எப்படி அவர்களை பற்றி அறிந்து கொள்கிறோம் என்றால் பழைய ஏடுகள் புத்தகங்கள், கல்வெட்டுக்ககள் போன்றவற்றின் மூலமாகவே இது இப்படி நடந்திருக்கிறது என்று நம்பி பின்பற்றுகிறோம். அவரவர் ஒவ்வொரு கூற்றை நம்புகிறோம்.
.
பைபிளில் "இயேசு சிலுவையில் அறையப்பட்டார், அவரை ரோம போர் சேவகர்கள் பிலாத்துவின் கட்டளைப்படி சிலுவையில் அறைந்து, அவர் மரித்து விட்டார் என்பதை உறுதி செய்தபின் சிலுவையில் இருந்து இறக்கி கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்" என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அவரோடு பேசி பழகிய மத்தேயு, மார்க்கு, லுக்கா, யோவான் போன்ற நான்கு பேர் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அவர் அவர்களுக்கு தெரிந்த பாணியில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஆனால் இந்த காரியங்கள் நடந்து சுமார் 500 வருடங்களுக்கு பிறகு வந்த முகமது நபி அவர்கள் இறைதூதர் சொன்னார் என்று சொல்லி இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று கூறுகிறார். நன்றாக யோசித்து பாருங்கள் நீங்கள் யார் சொல்வதை நம்புவீர்கள்?
.
 • ஒருவர் சொல்வதையா? அல்லது நன்கு பேர் சொல்வதையா?
 • அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் சொல்வதையா? அல்லது அதற்கு 500 வருடங்கள் கழித்து வாழ்ந்தவர் சொல்வதையா?

மேலும் பைபிளில் முக்கியமான காரியங்களை இரண்டுபேர் சாட்சி இல்லாமல் தீர்மானிக்க கூடாது (உப 19;15) என்று கூறும் போது ஒருவர் சொல்வதை எப்படி நான் உண்மை என்று நம்ப முடியும்?

.
இயேசுவுக்கு பதில் சிலுவையில் இன்னொருவர் மற்றப்பட்டாரா?
திருக்குர்ரான் சொல்வதுபோல் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்றும் இயேசுவுக்கு பதில் இன்னொருவர் சிலுவையில் மாற்றப்பட்டார் என்றும் நம்புவோமானால் கீழ் கண்ட கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் தெரிவியுங்கள்:
.

இயேசு தான் பூமியில் வாழ்ந்த காலங்களில் தான் மரிக்கப்போவதாகவும் பிறகு மூன்றாம் நாளில் எழும்பப்போவதாகவும் பல நேரங்களில் சொல்லியுள்ளார் (யோ:6:51, மத:26:12,20:12/19 ) அப்பொழுது ஏன் தனக்குப்பதில் வேறொருவர் மரிப்பார் என்று யாருக்கும் சொல்லவில்லை?

.
அவருக்கே அது பற்றி தெரியாது என்றாலும், இப்படி இறைவன் திடுதிப் என்று யாருக்கும் சொல்லாமல் அவரை தனதளவில் உயர்த்திக்கொண்டதால்தானே கிறிஸ்த்தவம் என்ற ஒரு மிகப்பெரிய தவறான மதமே உருவாகி விட்டது? அதற்கு யார் பொறுப்பு? இறைவன் என்றல்லவா ஆகிவிடும்? இறைவன் தனது தவறான செயலின் மூலம் ஒரு பெரிய கூட்ட மக்களை நரகத்துக்கு அனுப்பக்கூடியவர் இல்லவே இல்லை.

.
மேலும் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்றால் அவர் சீஷர்கள் இஸ்லாத்தை அல்லவா போதிக்க வேண்டும்? ஆனால் அவரோடு இருந்து இந்தியா வந்த தாமஸ் கூட கிறிஸ்தவத்தை அல்லவா வளர்த்தார்? அவரின் உண்மை சீடன் பேதுரு கூட தனது கடிதத்தில் கிறிஸ்த்தவத்தை பற்றி தான் எழுதியுள்ளார்.
.

அகவே இவர்கள் எல்லாம் வாழ்த்து முடித்து சுமார் 500 வருடங்களுக்கு பிறகு ஒருவர் வந்து (அதுவும் இறைவனல்ல) இறை தூதர் சொன்னார் என சொல்லி மாறுபாடாக சொல்லியிருப்பது நன்கு யோசிக்க வேண்டிய விஷயமல்லவா?
.

அன்பானவர்களே நீங்கள் எதையும் அறிவோடு ஆராய்ந்து பார்க்க கூடியவர்கள். ஆராய்ந்து பாருங்கள் சரியான பதில் இருந்தால் தெரிவியுங்கள் அல்லது அதற்கான பதில் எந்த தளத்தில் உள்ளது என்று தயவு செய்து தெரிவியுங்கள். எனக்கும் மற்றவர்களுக்கும் பயனாக இருக்கும். உண்மை எதுவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அனைவரின் நோக்கமும்.

5. சாத்தான் என்னும் தீய சக்தி உருவான காரணம்:

பைபிள் என்னும் வேதத்தின்படி "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்னும் தேவதூதன் ஒருவன் தான் தேவனை போல ஆகவேண்டும் என்றும், தேவனுடைய சிங்காசனத்துக்கு இணையாக தனது சிங்காசனத்தை உயர்த்தவேண்டும் என்றும் தன்னை எல்லோரும் வணங்க வேண்டும் என்றும் மனதில் நினைத்ததால் இறைவனால் ஆகாதவன் என்று தள்ளப்பட்டதாகவும். அவன் இறைவன் மேலுள்ள கடும் கோபத்தால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களை பாவம் செய்யவைத்து துன்புறுத்தி கடைசியில் நரகம் கொண்டுபோவதாகவும்" கூறுகிறது.
.
ஆனால் திருக்குர்ரான் வசனப்படி சாத்தான் என்னும் தீய சக்தி உருவான காரணம் வலிமை வாய்ந்ததாக இல்லை.
.
திருக்குர்ரான் 15ம் அதிகாரம் 31லிருந்து 39முடிய பார்க்கும்போது இப்லிஸ் என்னும் அக்கினியால் படைக்கப்பட்ட தேவ தூதனிடம் இறைவன் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை சிரம் பணிய சொன்னபோது பெருமையின் காரணமாக சிரம்பணிய மறுத்துவிடான், அகவே அவன் சாத்தானாக மாறியதாகவும் பின்பு இறைவனிடம் மனிதர்களை கெடுத்து காட்டுகிறேன் என்று அவகாசம் கேட்டு மனிதர்களை கெடுத்து வருவதாகவும் வசனங்கள் கூறுகின்றன.
.
இந்த வசனங்களை கூர்மையாக ஆராய்ந்தால் கீழ்க்கண்ட கேள்விகள் எழும்புகின்றன
.
கொலைகாரன் என்று ஒரு நீதிபதியால் தீர்க்கப்பட்ட ஒரு கொலை குற்றவாளி அதே நீதிபதியிடம் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் எல்லோரையும் கொலைகாரனாக மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னால் அனுமதி கொடுப்பாரா?
ஆனால் இங்கு இறைவன் தான் படைத்த மனிதனை சோதிப்பதற்கு தானே ஒரு மோசமனவனுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். இதன் மூலம் தீமையை உலகினுள் கொண்டுவர இறைவனே காரணமாகிவிட்டார். இப்படி காரணமாகி விட்டு பிறகு நீ இதை செய்யாதே அதை செய்யாதே செய்தால் நரகம் பொய் விடுவாய் என்று சொல்வதில் என்ன நியாயம்.
.
இப்படி ஒரு நியாயமற்ற செயலை இறைவன் செய்வாரா?
.
சோதிப்பதில் தவறில்லை என எடுத்துக்கொண்டாலும் சோதனையின் முடிவை பாருங்கள் " நரக அக்கினி". இன்று இந்த உலகில் நான் பாவமே செய்யாத பரிசுத்தவான் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படிஎன்றால் யார் நரக அக்கினிக்கு தப்ப முடியும்?
.
நாம் பெற்ற நமது பிள்ளைகளை இதுபோல் சோதிப்போமா? பிள்ளையை பெற்று அதை ஒரு தீயவனை வைத்து சோதித்து, தோற்றால் அக்கினியில் தூக்கி போடுவோமா?. மனிதனாகிய நாமே அப்படி செய்வதில்லை ஆனால் நீதியுள்ள இறைவன் அப்படி செய்வாரா.
.
நான் இறைவனிடம் போய் என்னை படையுங்கள் நான் சாத்தானின் சொல்லுக்கு கீழ்படியாமல் ஜெயித்துவிடுவேன் என்று சொல்லவில்லை. என் அனுமதி இன்றி படைக்கப்பட்டேன். பிறகு என்னை சோதித்து அக்கினியில் போடுவதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமற்ற செயல். இதை இறைவன் ஒருபோதும் செய்பவரல்ல. இந்த வார்த்தைகள் இறைவனின் நீதி தன்மையையே இழிவு படித்துகிறது.
.
நன்மை எது தீமை எது என்று இறைவன் தெரிவித்திருப்பது உண்மைதான். ஆனால், இந்து உலகில் எது அதிகம் பெருகியுள்ளது? மனிதனையும், மனதையும் கெடுக்கும் ஆபாசமும், பழிக்கு பழி வாங்கும் கொடூரமும், போட்டியும், பொறாமையும். வஞ்சகமும், ஏமாற்றும், தீவிரவாதமும் தான் மிக அதிகமாக பெருகியுள்ளது. இறைவனையும் அவருடைய மேன்மையையும் பற்றி பேசுவதை விட ஒரு சினிமா நடிகையை பற்றியோ அல்லது அரசியலை பற்றியோ பேசினால் அநேகர் கேட்க தயாராக உள்ளனர். நல்லவனாக இருப்பவன் கூட இந்த உலகில் உள்ளவர்களின் ஏமாற்று செயலால் தீயவனாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஒரு நிலைமையை நோக்கி மொத்த மனித கூட்டமும் போகும் பட்சத்தில் யார் நரக அக்கினிக்கு தப்ப முடியும்?
.
மனதை அதிகம் கவர்வது எது ?
இறை செய்தியா? ஆபாச செய்தியா?
நான் குற்றமற்றவன் பரிசுத்தவான் என்று நெஞ்சை தொட்டு யாரும் சொல்ல முடியாத பட்சத்தில் நரக அக்கினிக்கு எப்படி தப்புவது?
ஏன் இந்த விபரீத சோதனையை இறைவன் அனுமதித்தார்?
எல்லோரையும் நரகத்தில் போட்டு வேடிக்கை பார்க்கவா?
.
என்ற கேள்வி எழுகிறது
.
6. இறைவன் நரகத்துகேன்று ஒரு கூட்ட மனிதனை படைத்தாரா?
.
பைபிள் வசனப்படி " தேவன் தன் ஒரே பேரான குமரனை விசுவசிப்பவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை (இயேசுவை) தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்றும் பாதாள நரக அக்கினியில் இருந்து மனிதனை தப்புவிக்கவே இயேசு மனிதனாக பிறந்து நமது பாவத்துக்காக மரித்தார் என்றும், அன்பின் எல்லையாகிய அடுத்தவர்களுக்காக தன் ஜீவனையே கொடுக்கும் அன்பை விளக்குகிறது.
.
ஆனால் திருக்குர்ரான் 7வது அத்யாயம் 179வது வசனம் இப்படி சொல்கிறது.
"நிச்சயமாக நாம் ஜிங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துகேன்றே படைத்துள்ளோம்: அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்........."
இப்படி ஒரு அருமையான வசனத்தை இரக்கமுள்ள இறைவன் சொல்லுகிறாராம். அதாவது அவர் படைக்கும் போதே அநேகரை நரகத்துக்காக படைத்துவிட்டார். பிறகு அவர்கள் நரகம் போவது நிச்சயத்திலும் நிச்சயம் அல்லவா?.
.
ஏன் அவர்களை நரகத்துக்காக படைத்தார்?
நரகத்தில் அவர்கள் கிடந்தது படும் வேதனையை கண்டு ரசிக்கவா?
.
இந்த கேள்வியை தமிழ் இஸ்லாம் தளத்தில் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் " இறைவன் நல்லது எது கேட்டது என்று சொல்லி விட்டார் அதை உணர்ந்து நடக்கதவர்கள் நரகம் போவார்கள்" என்பதுதான்.
.
ஆனால் வசனத்துக்கும் அவர்கள் பதிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதாவது மேல் கண்ட வசனத்தில் இரண்டு காரியம் அடங்கியுள்ளது
.
1. மனிதனை இறைவன் படைத்தல்
2. மனிதன் தவறு செய்து நரகம் போகுதல்
.
இரண்டில் முதலில் செய்தது யார்?
.
இறைவன்
.
அவர் நிச்சயமாகவே நரகத்துகேன்று மனிதர்களை படைத்துவிட்டார். பிறகு மனிதன் அவர் படைத்தது போலவே தவறு செய்து நரகம் போகிறான் இதில் மனிதனின் தவறு என்ன இருக்கிறது
.
நான் கேட்கும் கேள்வி சர்வவல்ல எல்லோரையும் படைத்த இறைவனே தான் படைக்கும் போது "நிச்சயமாக இவன் நரகத்துக்குத்தான் போவான்" என்ற நல்ல எண்ணத்தோடு படைத்துவிட்டால் பிறகு யார் அவர்களை காப்பாத்த முடியும்? அவனால் எப்படி உணர்ந்து மனம் திரும்ப முடியும்?
.
அக மொத்தம் 5, 6 இரண்டையும் தொகுத்து பார்த்தால்
.
இறைவன் படைக்கும் போது நரகத்துக்காக படைத்துவிட்டார் பிறகு அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்று நினைத்து , ஒரு வழிகெட்டவனுக்கு அனுமதி கொடுத்து மனிதர்களை கெடவைத்து நரகத்துக்கு அனுப்பி அவர் வார்த்தையை உண்மையாக்குகிறார் என்பது போலல்லவா ஆகிவிடுகிறது.
.
ஏன் ஜனங்கள் வழி தவறி போகிறார்களே என்று தினம் தினம் பரிதவிக்கும் ஒரு அன்பின் தேவனை இதுபோல் நரகத்துகென்றே மனிதனை படைக்கும் ஒரு இரக்கமற்றவனாக சொல்வது நியாயமா?
.
அன்பானவர்களே கோபப்படவேண்டாம் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல, இறைவனிடம் அமர்ந்து விசாரித்துப்பாருகள் அவர் உண்மையை தெரிவிப்பார்