Monday, March 9, 2009

உலக ஞானத்தால் வேதாகமத்தை அறியமுடியாது!

இறைமார்க்கம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாவது அதை முழுமையாக அறிவு பூர்வமாக நிரூபிக்க முயற்றால் தோல்விதான் மிஞ்சும் என்றே நான் கருதுகிறேன்!

அவரவர் தங்கள் தங்கள் வேதங்களை உயர்ந்தது என்று கருதுவது இயல்புதான். அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையை உண்மை என்றுதான் நிரூபிக்க முயல்வார்களே தவிர, அதில் உள்ள குறைகள் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.


பரிசுத்த வேதாகமத்துக்கு பிறகு இரக்கப்படட திருக்குர்ரானில் அனேக வசனங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் பைபிளில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே நோக்கம் இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பிலிருந்து மனிதனை தடம்புரள செய்வதுதான் என்று நான் கருதுகிறேன்.

இஸ்லாம் சகோதரர்கள் சொல்வதுபோல் வேதத்தில் இன்னும் அனேக விளங்க முடியாத முரண்பாடுகளும் புதிர்களும் அடங்கியுள்ளன என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து புரியவைக்கவே பரிசுத்த ஆவியானவர் என்றொரு ஆசான் அருளப்பட்டு இருக்கிறார். ஆவியானவரின் துணையில் வேதத்தை படித்தால் அர்த்தமே வேறாக தோன்றும். அப்படியிருக்க ஆவியானவரின் துணையின்றி, முரண்பாடு என்று சொல்வதை எல்லாம் விளங்க வைப்பது என்பது கடினம்.


உதாரணமாக

"பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." (யாத் 20:5)

என்று சொன்ன அதே கர்த்தர்

"குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை"(எசே:18:20)

என்றும் கூறியுள்ளார்.

இதை சாதாரணமாக பார்த்தால் நேரடி முரண்பாடுகள் போலதான் தெரியும். ஆனால் ஆவியின் துணையுடம் ஆண்டவரிடம் விசாரித்தால் மட்டுமே இதன் உண்மையை புரியமுடியும்.

இதன் விளக்கம் என்னவென்றால்
அக்கிரமம் செய்த தகப்பனுக்கு பிறந்த குமாரன், ஆண்டவரின் வழியை அறிந்துகொள்ளாமல் தகப்பன் பாதையிலேயே தவறாக நடந்தால், தகப்பனின் அக்கிரமும் சேர்ந்து குமாரனிடத்தில் விசாரிக்கப்படும். அதே நேரத்தில், அக்கிரமகார தகப்பனுக்கு பிறந்த மகன், தகப்பனின் அக்கிரமத்தை அருவருத்து ஆண்டவரின் சரியான பாதையில் நடந்தால் தகப்பனின் அக்கிரமம் அந்த குமாரனிடத்தில் விசாரிக்கப்படுவது இல்லை!

இதுபோல், வேதத்தில் உள்ள எல்லா முரண்பாடுகளுக்கும் ஆண்டவரிடத்தில் பதில் உண்டு. அதயெல்லாம் இவர்கள விளங்கவேண்டுமேன்றால் ஆவியின் வரத்தை பெறவேண்டும். இல்லையென்றால், ஆண்டவர் ஏன் வெளிச்சத்தை படைத்த்தபின் சூரியனை படைத்தார்? சூரியன் வந்தால்தானே வெளிச்சமே வருகிறது! பூமியை படைக்க ஏன் எழு நாள் எடுத்துக்கொண்டார்? என்று எல்லா வசனத்துக்கும் கேள்வியை அடுக்கி கொண்டே போகலாம்.

நாம் விளக்கமாக பதில் சொன்னாலும் அதன் நம்புவதைவிட அடுத்த குறை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து கேள்விகள் எழுப்புவார்கள் இதற்க்கு முடிவிருக்காது என்றே கருதுகிறேன்!

ஒருவர் வேதத்தின் உண்மைகளை அறிய விரும்பினால் தொடர்ந்து பல மணிநேரம் ஜெபித்து, பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்று அதன்பின் படியுங்கள் அவரே சத்யத்தை தெளிவுபடுத்த்ட வந்த சத்ய ஆவியானவர்.


ஆனால் திருக்குரானில் அப்படி எதுவும் ஆவியானவர் வாக்கு பண்ணப்படவில்லை. மற்றும் அதில் தவறு எதுவும் இல்லை என்று இஸ்லாம் சகோதரர்கள் மார்தட்டுவதால், கிறிஸ்தவர்கள் சொல்லும் முரண்பாட்டுக்கு நீங்கள் பதில் கொடுத்தே ஆகவேண்டும் அந்த வரிசையில் சகோதரர் உமர் அவர்களின் அனேக கேள்விகள் பதிலின்றி உள்ளன.

முக்கியமாக:


"அல்லா யாருக்கும் தெரிவிக்காமல் இயேசுவை தனதளவில் உயர்த்த காரணம் என்ன? கிறிஸ்த்தவம் என்ற மதம் உருவாக அல்லாவின் தவறுதான் காரணமா?

பைபிள் என்பது பலரால் எழுதப்பட்ட ஒத்த கருத்துள்ள வேதமாக இருக்க, அல்லா ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் முழு குர்ரானையும் இறக்கினார்" "அதை இறக்கிய முஹம்மது உண்மை தீர்க்கதரிசி என்று எப்படி யார் மூலம் அறிவது?" அவர் சில நேரங்களில் சாத்தானின் வசனத்தை சொல்லியதாகவும் பிறகு நீக்கியதாகவும் திருக்குரான் சொல்கிறதே!

"இஸ்லாம் வாளால் பரவியதா?" அதை அமைதி மார்க்கம் என்று சொல்வது தகுந்ததா?

"அல்லா படைக்கும் போதே ஒரு கூட்ட மக்களை நரகத்துக்கேன்று படைக்க காரணம் என்ன?"

"திருக்குரானுக்கு முன் வந்த வேதங்கள் இறைவனால் இறக்கப்பட்டு மனிதனால் கெடுக்கப்பட்டது என்று திருக்குரான் சொல்வதால், தான் இறக்கிய வேதங்களை தன்னாலே பாதுகாக்க முடியாத அளவுக்கு அல்லா பலவீனரா? அந்த பலவீனர் எப்படி திருக்குரானை மட்டும் மாறாமல் பாதுகாக முடியும்?


இதுபோன்ற பல கேள்விகள் பதில்லிலாமல் இருக்கின்றன இஸ்லாம் நண்பர்களே இந்த கேள்விகளுக்கு பதில்தர முயற்சியுங்கள். மற்றபடி பைபிள் வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போன்று இருபுறமும் பேசும். ஆவியானவர் என்ற ஆசான் இல்லாமல் பைபிளை புரிவது கடினம்!

என்னிடம் ஒரு இஸ்லாம் நண்பர், "உண்மை வேதம் எதுஎன்பதை எப்படி அறிவது? ஆவியான தேவனை அறிவது எப்படி?" என்று கேட்டார். இரண்டு மணிநேரம் தொடந்து முழு மனதோடு எது உண்மை வேதம் என்று தெரியவேண்டும் என்று விடாப்பிடியாக ஜெபம் பண்ணுங்கள் உண்மையை அறியலாம் என்று ஆலோசனை கூறினேன். அனால் பாவம் அவரால் பத்து நிமிடத்துக்கு மேல் ஒருமனமாய் இறைவனை தேட முடியவில்லை. தூக்கம் வருகிறது என்று சொல்லி முடியவில்லை என்று விலகிவிட்டார்.

உண்மையை அறிய தேவன் நியமித்திருக்கும் குறைந்தபட்ச தகுதி ஓன்று வேண்டும் வெறும் மனித ஞானத்தால் வேதாகமத்தை சரியாக பொருள்கொள்வது கடினம்!

சரி! ஏன் இறைவன் இப்படி ஒரு முரண்பாடுகள் நிறைந்த வேதத்தை கொடுத்துள்ளார். புரிந்துகொள்வதே கடினம் என்றால் எப்படி வேதாகம உண்மையை அறிந்துகொள்வது? என்ற கேள்வி எல்லோருக்கும் எல்லாம்.

"நித்ய ஜீவனை தருவேன்" என்பதே இறைவன் மனிதர்களுக்கு தந்த வாக்குத்தத்தம். இங்கு உலகத்தில் தங்கள் அபார அறிவால் அநேகரை குழப்பும் புத்திசாலிகள், நித்ய ராஜ்யத்துக்கும் வந்து குழப்பாதபடி தேவன் வேதத்தை ஒருவருக்கு சரியாக புரியவைக்கும் பொறுப்பை தன்னிடமே வைத்துள்ளார். தேவன் உலக ஞானத்தை பயித்தியமாக்கியுள்ளார். உலக ஞானத்தால் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் இறைவனை அறிய முடியாது. அவரை அறிவதற்கு குறைந்தபட்ச தகுதி ஓன்று உண்டு! அது இருந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரை பெறமுடியும். அந்த ஆவியானவர் மூலமே தேவனை அறிவதும் நித்ய ஜீவனை அடைவதும் சாத்யமாகும்!